மிதக்கும் சிறை எப்படி இருக்கிறது? புலம்பெயர்ந்தோர் கருத்து!
மிதக்கும் சிறை எப்படி இருக்கிறது? புலம்பெயர்ந்தோர் கருத்து!
மிதக்கும் சிறை என விமர்சகர்களால் அழைக்கப்படும் மிதவைப்படகில் ஏற்றப்பட்ட புலம்பெயர்ந்தோரில் சிலர், அந்தப் படகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று கூறியுள்ளனர்.
புலம்பெயர்ந்தோரை மிதக்கும் படகில் அடைக்கும் பிரித்தானியாவின் திட்டம் குறித்து புலம்பெயர்தல் ஆதரவு சட்டத்தரணிகளும் எதிர்க்கட்சியினரும் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்
ஆனால், மிதவைப்படகில் ஏற்றப்பட்ட ஈரான் நாட்டவரான ஆமிர் (Amir, 32) என்னும் புலம்பெயர்ந்தோர், அங்கு காலை உணவாக கொடுக்கப்பட்ட முட்டைகள், சீஸ் மற்றும் ரொட்டியை சுவைத்தபின், பரவாயில்லை, இது எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
அல்ஜீரியா நாட்டவரான மற்றொரு புலம்பெயர்ந்தோரும், எல்லாம் நன்றாக இருக்கிறது, நார்மலாகத்தான் இருக்கிறது, உணவு நன்றாக இருக்கிறது, படுக்கை நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்த வாரத்தில் மேலும் சில புலம்பெயர்ந்தோர் அந்த மிதவைப்படகுகளுக்கு அழைத்துவரப்பட உள்ள நிலையில், அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.