மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு! வெளியான அறிவிப்பு
உலகம்செய்திகள்

மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு! வெளியான அறிவிப்பு

Share

மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு! வெளியான அறிவிப்பு

மியன்மாரின்‌ முன்னாள்‌ ஜனாதிபதி ஆங்‌ சான்‌ சூலக்கு 5 வழக்குகளில்‌ இராணுவஆட்சியாளர்களால்‌ பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனை அந்த நாட்டு அரச ஊடகங்கள்‌ நேற்று (01.08.2023) தெரிவித்துள்ளன.

அவர்‌ முற்றிலுமாக விடுவிக்கப்படவில்லை எனவும்‌, 14 வழக்குகளை அவர்‌ எதிர்கொள்வார்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம்‌ ஆண்டு இராணுவப்‌ புரட்சியையடுத்து, ஆங்‌ சான்‌ சூகி உட்பட ஜனநாயக அரசியல்‌ தலைவர்கள்‌ பலரும்‌ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஊழல்‌, சட்டவிரோதமாக தொடர்பாடல்‌ கருவிகளை வைத்திருந்தமை, கொரோனா கட்டுப்பாடுகளைப்‌ புறக்கணித்தமை முதலான குற்றச்சாட்டுக்களில்‌ அவருக்கு மொத்தமாக 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில்‌, அவற்றில்‌ 5 வழக்குகளிலிருந்து அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...