உலகம்
12 வயது சிறுமி வன்கொடுமை.. உடலில் பற்காயங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
12 வயது சிறுமி வன்கொடுமை.. உடலில் பற்காயங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பிறப்புறுப்பில் கடினமான பொருளை செருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 வயது சிறுமி பலாத்காரம்
இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான மைஹரில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மைஹர் நகரில் உள்ள ஒரு பிரபலமான கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையில் பணிபுரிந்த இருவர், 12 வயது சிறுமியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கு அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து மிருகத்தனமாக நடந்துள்ளனர். சிறுமியின் உடலில் பற்களால் கடித்த ரத்த காயங்களும், பிறப்புறுப்பில் கடினமான பொருள் செருகியது போன்றும் காணப்பட்டுள்ளது.
அதிக இரத்தப்போக்கு, உடலில் கடித்த அடையாளங்களுடன், மருத்துவ சிகிச்சைக்காக ரேவா பிரிவு தலைமையகத்திலுள்ள மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
ரவீந்திர குமார் மற்றும் அதுல் படோலியா ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்தது. இவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகளின் வீடுகள் இடிப்பு
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மைஹார் முனிசிபல் கவுன்சிலின் தலைமை நகராட்சி அதிகாரி இருவரின் குடும்பங்களுக்கும் அவர்களது நிலம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான ஆவணங்களைக் கோரி நோட்டீஸ் அனுப்பியதாக துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி (எஸ்டிஓபி) லோகேஷ் தபார் தெரிவித்தார்.
மேலும், விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளும் சட்டவிரோதமானது என்று தெரியவந்தது.
படோலியாவின் வீடு விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அரசு நிலத்தில் கட்டப்பட்டது என்றும், ரவீந்திர குமாரின் வீடு அனுமதியின்றி கட்டப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளையும் உள்ளூர் நிர்வாகம் இடித்துள்ளது.
காவல்துறை கொடுத்த விளக்கம்
முன்னதாக, காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) அசுதோஷ் குப்தா, “குற்றம் சாட்டப்பட்ட ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா ஆகியோர் 12 வயது சிறுமியின் அந்தரங்கத்தில் குச்சி அல்லது வேறு ஏதேனும் பொருள் செருகப்பட்டதை நான் மறுக்கவில்லை.
ஆனால், இதனை மருத்துவ அறிக்கையில் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். சிறுமி, ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மூத்த அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றதாகவும்” கூறினார்.
தேவைப்படும் நேரத்தில் சிறுமியை மேல் சிகிச்சைக்காக போபால் அல்லது டெல்லிக்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment Login