லொட்டரி வாங்கிய கனேடிய பெண்ணுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்!! 40 ஆண்டுகள்  முயற்சி!!

3 2

லொட்டரி வாங்கிய கனேடிய பெண்ணுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்!! 40 ஆண்டுகள்  முயற்சி!!

கனேடிய பெண் ஒருவர், தொடர்ந்து 40 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்கிவந்த நிலையில், ஒருவழியாக அவருக்கு பெரும் தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Kamloops நகரில் வாழும் Rhonda Malesku, தொடர்ந்து 40 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்கிவந்தாலும், தனக்கு பெரிய தொகை பரிசாகக் கிடைக்கும் என எதிர்பார்த்ததேயில்லை என்கிறார்.

அவர் எதிர்பார்க்காவிட்டால் என்ன? அதிர்ஷ்டம் அவரைத் தேடிவந்துவிட்டதே! ஆம், Rhondaவுக்கு சமீபத்தில் லொட்டரியில் 35 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.

Rhondaவுக்கு, தனக்கும், தன் மகன் மற்றும் மகளுக்கும் ஆளுக்கொரு வீடு கட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். தற்போது லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டத்தால் அவரது கனவு நிறைவேற உள்ளது.

Exit mobile version