உலகம்
ஜப்பானில் வீழ்ச்சி கண்ட மக்கள் தொகை
ஜப்பானில் வீழ்ச்சி கண்ட மக்கள் தொகை
உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும் ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தலின் பேரில் ஜப்பானில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அண்யைில் நடத்தப்பட்டது. நாட்டில் சுமார் 12½ கோடி மக்கள்தொகையே பதிவாகி உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.65 சதவீதம் அதாவது 8 இலட்சம் பேர் குறைவு எனவும் கூறப்படுகிறது.
இந்த கணக்கில் ஜப்பான் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் சுமார் 30 இலட்சம் வெளிநாட்டினரும் அடங்குவர்.
இதனை நாட்டின் அவசரநிலையாக கருதி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் கிஷிடா தெரிவித்துள்ளார். மேலும் மக்கள்தொகையை அதிகரிக்கும் நோக்கில் சுமார் ரூ.2 இலட்சத்து 5 ஆயிரம் கோடி நிதியை ஜப்பான் அரசு ஒதுக்கியுள்ளது.
You must be logged in to post a comment Login