நகைச்சுவையாளர் சார்லி சாப்ளின் மகள் மரணம்

நகைச்சுவையாளர் சார்லி சாப்ளின் மகள் மரணம்

நகைச்சுவையாளர் சார்லி சாப்ளின் மகள் மரணம்

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

ஆனால், பலருக்கும் சார்லி சாப்ளினின் குடும்பத்தைக் குறித்து அவ்வளவாகத் தெரியாது எனலாம்.

சார்லி சாப்ளினுக்கு நான்கு மனைவிகள். அவரது நான்காவது மனைவியான Oona O’Neillக்கு பிறந்தவர், ஜோஸபின் சாப்ளின். ஒரு நடிகையாக பல்வேறு பிரபல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிந்தவர் ஜோஸபின்.

நீண்ட காலமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வாழ்ந்துவந்த ஜோஸபின், கடந்த வாரம், அதாவது, ஜூலை மாதம் 13ஆம் திகதி, தனது 74ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

ஜோஸபினுக்கு மூன்று பிள்ளைகளும், நான்கு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவரது இறுதிச்சடங்கு, தனிப்பட்ட முறையில் பாரீஸில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version