உலகம்
பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு!
ஒரு வருடத்தில் பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ராஜ குடும்பத்தின் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2022 -23) ராஜ குடும்பத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, 86.3 மில்லியன் பவுண்டுகள்.
2021 – 22 காலகட்டத்திற்கும் இதே தொகைதான் ஒதுக்கப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு செலவோ 107.5 மில்லியன் பவுண்டுகள்! இந்த தொகை கடந்த ஆண்டைவிட செலவு 5 சதவிகிதம், அதாவது, 21 மில்லியன் பவுண்டுகள் அதிகம் ஆகும்.
பக்கிங்காம் அரண்மனையைப் புதுப்பித்தல், மறைந்த மகாராணியார் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்கான செலவு, மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவுக்கான செலவு என இந்த ஆண்டு அதிக செலவானதுடன், பணவீக்கமும் அதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரண்மனை அலுவலர்கள்.
பக்கிங்காம் அரண்மனை புதுப்பிக்கப்படுவதற்காக இந்த ஆண்டு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 34.5 மில்லியன் பவுண்டுகள். பக்கிங்காம் அரண்மனையின் புதுப்பித்தலுக்காக 10 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையோ 369 மில்லியன் பவுண்டுகள். ஆனால், தற்போது அங்கு யாரும் வாழ்வில்லை.
புதுப்பித்தல் பணி முடிந்தபின் மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் பக்கிங்காம் அரண்மனையில் வாழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login