rtjy 11 scaled
உலகம்செய்திகள்

30000 பேரை உயிரோடு கடலில் வீசிய கொலைகார விமானம் ஆர்ஜென்டினாவில்

Share

ஆர்ஜென்டினாவில் இராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 30000 பேரை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்டினாவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை அந்நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்றிருந்தது.

ஆர்ஜென்டினாவில் இராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, விமானத்தின் மூலம் உயிருடன் கடலில் வீசி கொல்லப்பட்ட கொடூரம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கொலைகார விமானம் என அழைக்கப்படும் இந்த விமானம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஆர்ஜென்டினாவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் புயனோஸ் ஐரெஸில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த விமானம் வைக்கப்படவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

Screenshot 2025 11 20 174232
செய்திகள்அரசியல்இலங்கை

‘போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசைதிருப்பப்படாது; எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது’ – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளிப்பு!

போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசை திருப்பப்படாது என்றும், எதிர்க்கட்சிகளின் முயற்சிகளால் அதை ஒருபோதும் தடுக்க...

25 691c5875429c2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் இந்திய வம்சாவளிச் செல்வந்தர்கள்: வரிச் சுமை அதிகரிப்பால் துபாய், இந்தியாவுக்குப் பயணம்!

பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளிச் செல்வந்தர்கள் பலர், அங்குள்ள வரிச் சுமை அதிகரிப்பு மற்றும் கொள்கை...

p 2 91443317 sothebys golden toilet
செய்திகள்உலகம்

18 கரட் தங்கக் கழிப்பறை $12.1 மில்லியனுக்கு ஏலம்: சர்ச்சைக்குரிய கலைஞரின் ‘அமெரிக்கா’ சிற்பம் சாதனை விலை!

இத்தாலியக் கலைஞரான மௌரிசியோ கட்டேலன் (Maurizio Cattelan) உருவாக்கிய, 18 கரட் தங்கத்தாலான, முழுமையாகச் செயல்படும்...