உலகம்

கொரோனாவை விட கொடிய தொற்று ! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Published

on

கொரோனாவை விட கொடிய தொற்று ! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கொரோனா தொற்றை விட கொடிய தொற்றுக்கு, உலகம் தயாராக இருக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகையே உலுக்கிய கொரோனா தொற்றை விட, கொடூரமான தொற்று பரவ இருப்பதாகவும், எனவே உலக மக்கள் அடுத்த ஊரடங்குக்கு தயாராகி கொள்ளுங்கள், என உலக பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட போது, உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பல இன்னல்களை சந்தித்தது.

‘கொரோனா தொற்றோடு எல்லாம் முடிந்து விடவில்லை, நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் புதிய வகை தொற்றின் அச்சுறுத்தல் ஏற்படவுள்ளது’ என டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

76வது உலக சுகாதார மாநாட்டில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர், வெளியிட்ட அறிக்கையில் கொரோனாவை விட கொடிய தொற்றை பற்றிய எச்சரிக்கை அறிக்கை  உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

’அடுத்த தொற்று நோய் வரும் போது, நாம் தீர்கமாக, ஒற்றுமையாக நின்று அவற்றை எதிர் கொள்ள வேண்டும்’ என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

2017ஆம் ஆண்டில் உலக சுகாதார சபையில் அறிவிக்கப்பட்ட, triple billion இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தையும் தொற்றுநோய் பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

‘தொற்றுநோய் உலக சுகாதார அமைப்பின் திட்டங்களை திசை திருப்பி விட்டது, ஆனால் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஏன் முக்கியம் என்பதையும், தொற்றுநோயை எதிர்கொண்ட அதே அவசரத்துடனும் உறுதியுடனும் நாம் ஏன் அவற்றைத் தொடர வேண்டும்’ என்று டெட்ரோஸ் அறிவித்துள்ளார்.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version