உலகம்

சார்லஸ் முடி சூட்டு விழா – தயாராகும் சிம்மாசனம்

Published

on

இங்கிலாந்தில் நீண்ட காலமாக ராணியாக இருந்த 2- ம் எலிசபெத் கடந்த ஆண்டு தனது 93-வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து இங்கிலாந்து புதிய மன்னராக 2-ம் எலிசபெத்தின் மகன் 3- ம் சார்லஸ் நியமிக்கபட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழா வருகிற மே மாதம் 6ம் திகதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிம்மாசனம் பயன்படுத்தப்படுகிறது.

தங்க முலாம் பூசப்பட்ட இந்த சிம்மாசனம் 1308-ம் ஆண்டு மன்னர்கள் முடி சூட்டு விழாவுக்காக தயார் செய்யப்பட்டது.

1399-ம் ஆண்டு மன்னர் ஹென்றி இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து முடிசூட்டி கொண்டார். அதன்பிறகு 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் இந்த சிம்மாசன நாற்காலி சேதம் அடைந்தது.

பின்னர் இந்த சிம்மாசனத்தின் அடித்தளம் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலையில் சிங்க உருவம் பொருத்தப்பட்டு உள்ளது. பல சிறப்புகளை பெற்ற சிம்மாசனத்தை புதுப்பிக்கும் பணிகள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

மே மாதம் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் இதில் அமரவைக்கப்பட்டு முடி சூட்டப்படுவார். அப்போது அவரது தலையில் கிரீடம் வைக்கப்படும். இந்த விழாவால் லண்டன் பக்கிம்காம் அரண்மனைகளை கட்டத் தொடங்கி இருக்கிறது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version