ஐஎஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்- புதிய தலைவர் நியமனம்

ezgif 3 e0ab7e89aa

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷி, போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

ஈராக்கைச் சேர்ந்த ஹாஷிமி, கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக ஆடியோ செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அவர் எப்போது இறந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து எந்த விவரத்தையும் செய்தித் தொடர்பாளர் வெளியிடவில்லை.

அதேசமயம், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக அபு அல்-ஹூசைன் அல்-ஹூசைனி அல்-குராஷி நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐஎஸ் அமைப்பின் முந்தைய தலைவரான அபு இப்ராஹிம் அல்-குராஷி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருக்கு முன்னால் இருந்த தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அக்டோபர் 2019 இல் இட்லிப் நகரில் கொல்லப்பட்டார்.

#world

Exit mobile version