மகாராணியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நிறைவு! – இறுதி சடங்கு இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு

304167548 6424991664195042 3649724167357598428 n

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் இன்று (19) நடைபெறவுள்ளன. இந்நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மகாராணியின் பூதவுடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்ட நேரம் இலங்கை நேரப்படி காலை 11 மணியுடன் நிறைவடைந்தது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 3.14 மணிக்கு ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு ரோயல் கடற்படையின் வாகனத்தில் (Gun carriage) கொண்டு செல்லப்படும்.

அரச குடும்ப உறுப்பினர்களும் இறுதி ஊர்வலத்துடன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு செல்வார்கள்.
அங்கு மகாராணியின் உடல் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.22 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் முன் வாசலுக்கு வந்து சேரும், எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தொடங்கும்.

இலங்கை நேரப்படி மாலை 4.25 மணிக்கு, வெஸ்ட்மின்ஸ்டர் சபை பிரித்தானியா மகாராணிக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தும்.

மகாராணியின் இறுதி சடங்குகள் இலங்கை நேரப்படி மாலை 4.30 மணியளவில் நிறைவடையவுள்ளது.
பின்னர் இலங்கை நேரப்படி மாலை 5.30 மணியளவில், லண்டனில் உள்ள புகழ்பெற்ற வெலிங்டன் ஆர்ச்சுக்கு இல்லத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்படும், அங்கு ராணியின் உடல் சவப்பெட்டி வாகனத்தில் வைக்கப்பட்ட பின்னர், அரச குடும்ப உறுப்பினர்கள் வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு ராணியின் சவப்பெட்டி கொண்டு செல்லப்படும்.

இலங்கை நேரப்படி இரவு 7.36 மணிக்கு, மகாராணியின் உடலை ஏற்றிச் செல்லும் சவவாகனம் வின்ட்சர் கோட்டைக்கு வந்து சேரும், மேலும் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கான பயணத்தில் மன்னர் சார்லஸ் III மற்றும் பிற அரச குடும்பத்தினர் செல்வார்கள்.

பின்னர் இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு ராணியின் அடக்கம் செய்வதற்கான ஆயத்த சடங்குகள் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் ஆரம்பமாகி, இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.00 மணியளவில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் இளவரசர் பிலிப்பின் உடலுடன் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் ( ராணி எலிசபெத்தின் தந்தை) செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்குள் அமைந்துள்ள அரசர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன், ராயல் வால்ட்டில் இறக்கி வைக்கப்படும்.

#SriLankaNews

Exit mobile version