ஜப்பான் நாடாளுமன்றின் மேல்சபை தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில், ஆளுங்கட்சி நடைபெற்றுள்ளது.
இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுபோதுதான், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து முடிந்த இரு தினங்களில் வாக்குப்பதிவு நடந்தது.
மேல்சபையில் மொத்தமுள்ள 248 இடங்களில், 146 இடங்களில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக, 2025 வரை பிரதமர் புமியோ கிஷிடா பிரச்னைகள் இன்றி ஆட்சி செய்யக் கூடிய நிலை உருவாகி உள்ளது.
இந்த வெற்றியை வரவேற்பதாக கூறிய பிரதமர் கிஷிடா, சமீபத்தில் நடந்த அபே படுகொலை காரணமாக அந்த வெற்றியை கொண்டாடவில்லை. ‘கட்சியினரின் ஒற்றுமை தான் மற்ற எல்லாவற்றையும் விட முக்கியம்’ என, அவர் வலியுறுத்தினார்
#WorldNews