உலகம்
கிம் ஜாங் உன்னுக்கு தலையில் சத்திர சிகிச்சை?
கிம் ஜாங் உன்னுக்கு தலையில் சத்திர சிகிச்சை?
வடகொரிய அதிபரின் உடல்நலம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துவரும் நிலையில், அவரது புதிய புகைப்படம் மீண்டும் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
கடந்த 30-ஆம் திகதி வடகொரியா அரச தொலைக்காட்சியில் கிம் ஜாங் உன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. அப்போது தலையின் பின்பக்கத்தில் அவர் பேண்டேஜ் அணிந்திருந்தது தெரிய வந்தது. எனவே அவருக்கு தலையில் அடிபட்டதா இல்லை அறுவைச் சிகிச்சை ஏதேனும் நடந்ததா என உலக நாடுகள் ஊகிக்கத் தொடங்கியுள்ளன. எனினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
You must be logged in to post a comment Login