அந்தமான், நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை தொடர் நிலநடுக்கம்!

1723812 20 tremors

அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை 5.57 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

வளைகுடாவில் இருந்து 44 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிகாலை 2.54 மணியளவில் போர்ட்பிளேயருக்கு தென்கிழக்கே 244 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.

ஒரே நாளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

#WorldNews

 

Exit mobile version