வாழும் கடவுளாக தேர்வான 2 வயது சிறுமி

7

நேபாளத்தில் (Nepal) வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற 2 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்தநிலையில் இதுவரை காலமும் குமாரி த்ரிஷ்ணா ஷக்யா என்று அழைக்கப்படும் சிறுமியை, வாழும் தெய்வமாகப் போற்றி வந்தனர்.

பருவமடைந்தவுடன் குமாரி ஒரு சாதாரண மனிதராகக் கருதப்படுவார் என்பது மரபு. ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்கும்.

குராமரியாக இருந்து ஓய்வுபெற்ற பெண்களை திருமணம் செய்பவர் விரைவில் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்வர்.

அந்த வகையில், 2017ல் தேர்வான குமாரி த்ரிஷ்ணா ஷக்யாவுக்கு தற்போது 11 வயது பூர்த்தியாகியுள்ளதால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதன்படி, நேபாளத்தின் புதிய வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற சிறுமி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கமைய அவர் பல்லக்கில் சுமந்து செல்லப்பட்டு, மன்னர் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆர்யதாரா சாக்யாவின் தந்தை, தனது மனைவி கர்ப்பமாக இருந்த போது தெய்வமாக கனவு கண்டதாகவும், தனது மகள் சிறப்புமிக்கவராக இருப்பார் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version