அசர்பைஜானில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 14 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரகேபாட் விமான நிலையத்தில் சுமார் 10.40 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகொப்டர் அசர்பைஜானின் மாநில எல்லை சேவைக்கு சொந்தமான இராணுவ ஹெலிகொப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வாரங்கள் அசர்பைஜானுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடம்பெற்ற மோதலின் பின்னரே இவ்விபத்து இடம்பெற்றுள்ளாக தெரிய வருகின்றது.
விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியாத காரணத்தால் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
#World
1 Comment