சிலி நாட்டில் தீ விபத்தில் சிக்கி 14 பேர் பலி

tamilni 115

சிலி நாட்டில் தீ விபத்தில் சிக்கி 14 பேர் பலி

சிலி நாட்டின் தெற்கு நகரமான கொரோனலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 8 சிறுவர்கள் உற்பட 14பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்தானது சிலியிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமைத்துள்ள தகர கொட்டகைகள், மரத்தால் வீடுகளில் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், மீட்புக்குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அடுப்பில் சமையல் செய்யும் போது தீப்பற்றி, மர வீடுகளுக்கு பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version