கால்பந்து மைதானகூட்டநெரிசலில் 12 பேர் உயிரிழப்பு !

9TI6EDAzYOdOz7dg4Cde

எல் சால்வடார் நாட்டில் கால்பந்து மைதானத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உள்ளூர் கால்பந்து அணிகள் மோதும் காலிறுதி ஆட்டம், அந்நாட்டின் மிகப்பழமை வாயந்த கஸ்கேட்லான் மைதானத்தில் நடைபெறவிருந்தது.

போட்டியைக் காண 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்திருந்த நிலையில், மைதானத்திற்குள் ஒரே நேரத்தில் ஏராளமானோர் செல்ல முயன்றதால், நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது.

பலர் கீழே விழுந்த நிலையில் 12 பேர் பலியாயினர். இதையடுத்து கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

#world

Exit mobile version