38,000 அடி உயரத்திலிருந்து திடீரென கீழ் இறங்கிய விமானம்

tamilni 479

38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானமொன்று திடீரென கீழ் இறங்கியதால் பயணிகள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரீபியன் கடலில் அமைந்துள்ள பார்படாஸ் தீவிலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நோக்கி 225 பயணிகளுடன் ஏர்பஸ் விமானமொன்று புறப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரம் வானில் பறந்துகொண்டிருந்த நிலையில், காற்றில் ஏற்பட்ட திடீர் மாறுபாடு காரணமாக விமானம் திடீரென கீழ் நோக்கி இறங்கியுள்ளது.

மான்செஸ்டரிலிருந்து புறப்பட்ட விமானம், இரண்டு மணி நேரமாக பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென செங்குத்தாக கீழ் நோக்கி இறங்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் 11 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன், உடனடியாக விமானி விமானத்தை அருகிலுள்ள பெர்முடா தீவில் தரையிறக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீடு திரும்ப வேண்டிய பயணிகள் அனைவரும் விமான நிறுவனம் ஏற்பாடு செய்த ஹோட்டல்களில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version