நைஜீரியாவில் கடத்தப்பட்ட கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் 100 பேர் மீட்பு!

2.6 1

நைஜீரியாவின் நைகர் மாநிலத்தின் பாபிரி என்ற இடத்திலுள்ள செயின்ட் மேரிஸ் கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 100 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக நைஜீரிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜீரிய அரசாங்கத்தால் மீட்கப்பட்ட இந்த மாணவர்கள், நேற்று முன்தினம் (டிசம்பர் 8) இராணுவ வாகனங்கள் மற்றும் கவச வாகனங்களில் அரசு மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட பிள்ளைகள் 10 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் உதைப்பந்தாட்ட ஜேர்சிகள், அங்கிகள் மற்றும் செருப்புகளை அணிந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர்.

கடந்த மாதம் 21ஆம் திகதி, இப்பாடசாலைக்குள் புகுந்த துப்பாக்கி தாரிகள், 300 இற்கும் மேற்பட்ட மாணவர்களையும், 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version