வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி: ட்ரம்ப் உத்தரவு

19 5

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க திரைப்படத்துறை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், இந்த வரிவிதிப்பை உடனடியாக செயற்படுத்துமாறு வணிகவரித்துறை மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மீண்டும் திரைப்படத் தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், இதற்கு ஆதரவைக் காட்டும் விதமாக, பிற நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கான வரிகளை அதிகரிக்க ட்ரம்ப் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version