மலை கழன்று வீழ்ந்து 10 பேர் பலி!!

1641781888872

பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மினாஸ் கெராய்ஸ் பகுதியில் மலை கழன்று வீழ்ந்ததில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக பிரேசில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரேசில் உள்ள மினாஸ் கெராய்ஸ் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ளுர் வெளியூர் சுற்றுலா பயணிகள் பலரும் படகில் சவாரி செய்து மகிழ்வது வழமை.

எதிர்பாராத தருணத்தில், உயர்ந்து வளர்ந்திருந்த மலை முகட்டில் இருந்து பாறைகள் உடைந்து விழுந்தன. திடீரென மலையின் ஒரு பாரிய கற்பகுதி கழன்று ஆற்றில் வீழ்ந்தது.

இந்நேரத்தில் மூன்று படகுகள் குறித்த அனர்த்தத்தில் சிக்கியது. குறித்த படகுகளில் பயணித்தவர்களில் 8 பேர் வரை உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் இருவரை காணவில்லை. 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதில் ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
#World

 

 

Exit mobile version