ராஜமௌலியின் பாகுபலி படத்தில் நடித்த விஜய்!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் தீவிரமாக நடந்து வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கஉள்ளார். சமீபத்தில் இப்படத்தின் லுக் டெஸ்ட் எடுப்பதற்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்திருப்பார்.
இந்நிலையில் AI தொழிநுட்பம் மூலம் விஜய் பாகுபலி படத்தின் சில காட்சிகளில் நடித்தது போல எடிட் செய்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.