tamilni 70 scaled
உலகம்செய்திகள்

புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில்… நிறைவேறிய நோஸ்ட்ராடாமஸின் திகைக்க வைக்கும் கணிப்புகளில் ஒன்று

Share

2024 பிறந்து சில மணி நேரத்தில் நோஸ்ட்ராடாமஸின் திகைக்க வைக்கும் கணிப்புகளில் ஒன்று நிறைவேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவஞானியான நோஸ்ட்ராடாமஸ், ஜேர்மனியின் அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் 2019ல் கோவிட் தொற்றுநோய் தொடர்பிலும் துல்லியமாக கணித்த பெருமைக்குரியவர்.

தற்போது புத்தாண்டில் ஜப்பான் நாட்டை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம் தொடர்பிலும் அவர் கணிப்பு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. 7.6 ரிக்டர் அளவில் பதிவான அந்த நிலநடுக்கத்தில் சிக்கி, இதுவரை 62 பேர்கள் பலியாகியுள்ளனர்.

நோஸ்ட்ராடாமஸ் தமது 2024 குறித்த கணிப்பில், வறண்ட பூமி மேலும் வறண்டு, பெரும் வெள்ளம் ஏற்படும் என குறிப்பிட்டிருந்துள்ளார். மேலும், மிக மோசமான நிலநடுக்கத்திற்கு பிறகு பேரலை மொத்தமாக நிலப்பரப்பை சூழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2024ல் சீனாவுடன் மோதல் ஏற்படும் என்றும், அரச குடும்பம் ஒன்றில் குழப்பம், கலக்கம் ஏற்படும் என்றும் காலநிலை மாற்றத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. உயிர் பிழைத்தவர்கள் தெருக்களில் கடும் குளிரை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தற்போது சடலங்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து சில இடங்களில் 3 அடிக்கு மேல் அலைகள் எழும்பின.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் முதல் 72 மணி நேரம் மிக முக்கியம் என்றும், அதன் பின்னர் உயிர் தப்பியவர்களின் எண்ணிக்கை சருவடையும் என்றும் நிபுணர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...