23 6
உலகம்

திருமணத்திற்காக அவுஸ்திரேலிய செல்ல ஆயத்தமான யுவதிக்கு நேர்ந்த கதி

Share

திருமணத்திற்காக அவுஸ்திரேலிய செல்ல ஆயத்தமான யுவதிக்கு நேர்ந்த கதி

திருமணத்திற்காக அவுஸ்திரேலிய செல்ல ஆயத்தமான யுவதியொருவர் கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடவுச்சீட்டை புதுப்பிக்க வந்த மணப்பெண்ணுக்கு, எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இணையம் மூலம் விண்ணப்பித்து கைரேகை அடையாளங்களை வழங்க வந்தபோது, ​​குடிவரவு அலுவலக அதிகாரிகள் கடவுச்சீட்டை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.

திட்டமிட்டபடி திருமணத்திற்கு வராவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதாக அவுஸ்திரேலியர் தெரிவித்ததையடுத்து குறித்த யுவதி அழுது புலம்பியவாறு அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளார்.

எனினும் தற்போதுள்ள நடைமுறைகளுக்கமைய குறித்த யுவதிக்கு கடவுச்சீட்டை வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதன்போது பிரச்சினைகளை தீர்க்க நியமிக்கப்பட்ட அதிகாரி நேரம் ஒதுக்கியவர்களுக்கு மாத்திரம் விமான டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன், திட்டமிட்ட வகையில் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை குறித்த யுவதி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மிக அவசரமாக கடவுசீட்டை பெற இருப்பவர்கள் மாத்திரம் சாதாரண கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறும் ஒக்டோபர் மாதத்திற்கு முதல் அநாவசியமாக கடவுச்சீட்டை பெறுவதை தவிர்க்குமாறும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...