உலகம்செய்திகள்

ஜெர்மனியை உலுக்கிய விபத்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த துயரம்

Share
25 12
Share

ஜெர்மனியை உலுக்கிய விபத்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த துயரம்

Germany Christmas Market Accident

ஜெர்மனியில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவரவில்லை, எனினும் 50 முதல் 70 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று அவசர சேவைகளை மேற்கோள் காட்டி ஜெர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, கிறிஸ்துமஸ் சந்தையில் இருந்த மக்கள் கூட்டத்தின் ஊடாக அதிவேகமாக கறுப்பு நிற BMW கார் ஒன்று டவுன் ஹால் திசையை நோக்கிச் சென்றுள்ளது.

அதனை தொடர்ந்து, விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் அந்த பயங்கர விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியை கைது செய்துள்ளனர்.

கிழக்கு ஜெர்மனிய நகரமான Magdeburg இல் நடைபெற்ற இந்த சம்பவமானது, ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபர் ஒரு சவுதி குடிமகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தாக்குதல் இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் காரை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...