ஈக்வடார் நாட்டில் சிறையில் இருந்து கைதிகள் தப்பிய பிறகு தொலைக்காட்சி நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈக்வடார் நாட்டில் உள்ள மிகப்பெரிய சிறைச் சாலையில் இருந்து பெரும் கைதிகள் கூட்டம் தப்பி இருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சிறையில் இருந்து தப்பிய கைதிகள் Guayaquil நகரில் உள்ள தொலைகாட்சி நிலையம் ஒன்றை பயங்கர ஆயுதங்களுடன் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
மேலும் சிறையில் இருந்து தப்பிய கைதிகளால் பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.
சிறையில் இருந்து தப்பிய ஈக்வடார் நாட்டின் அதிபயங்கரமான குற்றவாளிகள் போரை அறிவித்ததை தொடர்ந்து, சில மணி நேரத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி டேனியல் நோபோவா(Daniel Noboa) நாட்டில் உள்நாட்டு ஆயுத மோதல் உருவாகி இருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் ஆயுத மோதலில் ஈடுபடும் நபர்களை வெளியேற்ற நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் ஜனாதிபதி நோபாவா அறிவித்துள்ளார்.