3 17 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் பெண்ணையும் இளைஞரையும் வாளால் தாக்கிவிட்டி தப்பியோடிய மர்ம நபர்

Share

கனடாவில் பெண்ணையும் இளைஞரையும் வாளால் தாக்கிவிட்டி தப்பியோடிய மர்ம நபர்

கனேடிய மாகாணமொன்றில் இரண்டு பேரை வாளால் தாக்கிவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், பொலிசார் அவரை வலைவீசித் தேடிவருகிறார்கள்.

கனடாவின் Prince Edward Island மாகாணத்தில், கடற்கரைக்குச் சென்றிருந்த ஒரு பெண்ணும், இளைஞர் ஒருவரும் மர்ம நபர் ஒருவரால் வாளால் தாக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண் பலத்த காயமடைந்துள்ளார் என்றாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞருக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளன. அவர்களுடன் இருந்த மூன்றாவது நபர் தாக்குதலிலிருந்து தப்பிவிட்டார்.

அந்தப் பெண்ணையும் இளைஞரையும் தாக்கிய நபர் இன்னமும் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ள பொலிசார், அந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

அவரால் இப்போதைக்கு பொதுமக்களுக்கு அபாயம் இல்லை என்று கூறியுள்ள பொலிசார், என்றாலும், மக்கள் கதவுகளை மூடிக்கொண்டு பத்திரமாக வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...