எண்ணெய் விலையை கட்டுப்படுத்த G7 நாடுகள் அங்கீகாரம்!

image ddc6cedb71

G7 நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.

இந்த தீர்மானம் வரும் 5ம் திகதி அல்லது அதற்கு பிறகு மிக விரைவாக அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் விலையை சந்தை விலையை விட 5% குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று (02) 64 டொலர்களாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் போரில் ரஷ்யா இலாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில் இந்த விலை கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Exit mobile version