அமெரிக்காவின் மிகப்பெரிய முஸ்லிம் சிவில் உரிமைகள் மற்றும் வழக்கறிஞர் குழுக்களில் ஒன்றான அமெரிக்க – இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR – Council on American–Islamic Relations) என்ற அமைப்பை, வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாகப் புளோரிடா மாகாண கவர்னர் ரான் டிசான்டிஸ் அறிவித்துள்ளார்.
சி.ஏ.ஐ.ஆர். அமைப்பு, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் ‘முஸ்லிம் சகோதரத்துவம்’ (Muslim Brotherhood) என்ற அமைப்பில் தொடர்புடைய நபர்களால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அமைப்புகள் ஹமாஸ் மற்றும் 2023 அக்டோபர் 7இல் இஸ்ரேல் மீதான தாக்குதலில் தொடர்பு உடையவை எனப் புளோரிடா மாகாண கவர்னர் ரான் டிசான்டிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் அடிப்படையில், இந்த முஸ்லிம் சிவில் உரிமைகள் அமைப்பை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.