அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது.
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாகவும் இது அமைந்திருந்தது.
இதற்குப் பதில் தாக்குதலாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் இன்றைய தினம் அறிவித்துள்ளது.
வர்த்தகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலானது, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிம் செயல் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் பின்னர், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், உள்ளடங்கலான 80-க்கும் அதிகமான இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஈரானுக்கான எண்ணெய் ஏற்றுமதி உரிமத்தையும் அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை “வெளிப்படையான ஆக்கிரமிப்பு” என்று கண்டித்துள்ள ஈரான், பஹ்ரைனின் ஐந்தாவது கடற்படை தலைமையகம் மற்றும் குவைத்தின் அலி அல் சேலம் வானூர்திபடை தளம் உள்ளிட்ட 80 இற்கும் அதிகமான அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்திகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா வானூர்தி ஒன்றையும் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் வான்வழி எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டதுடன்,
பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

