மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் பலி – ஐ.நா. கண்டனம்!

d8a6a670 6a8c 11ee 883d 61bb9e676cae

மியன்மாரில் ஆளும் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ (Mrauk-U) நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையைக் குறிவைத்து மியன்மார் இராணுவத்தின் போர் விமானம் ஒன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலால் மருத்துவமனையின் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

மருத்துவமனைகள் போன்ற பொதுநல நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல் என ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version