கொரோனா வைரஸ் பிறழ்வின் அதி அபாயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒமிக்ரோன் பிறழ்வானது தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், அது உலகளாவிய ரீதியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்த வல்லது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒமிக்ரோன் இனங்காணப்பட்டால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும், எனினும் இன்று வரை ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வுடன் தொடர்புடைய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இது குறித்து உலக நாடுகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும், உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
#world