கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

MediaFile 1 1

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை வழங்கிய ஒரு பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மதுகமவைப் பூர்வீகமாகக் கொண்ட குறித்த பெண்ணை எதிர்வரும் அக்டோபர் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19) உத்தரவிட்டுள்ளது.

மதுகம – வெலிபென்னவைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளரான 52 வயதுடைய அந்தப் பெண், இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியதாகத் தெரியவந்த நிலையில், அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தின் சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Exit mobile version