வவுனியா ஏ9 வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா நகரில் இருந்து ஏ9 பிரதான வீதியூடாக பயணித்த கார், வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு அலுவலகத்திற்கு எதிராகவுள்ள வீதிக்கு திரும்ப முற்பட்ட போது குறித்த வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் வவுனியா நகரிற்கு திரும்ப முற்பட்ட போது இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews