இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் 7.6 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்தோனேசிய நேரப்படி இன்று (14) காலை 11.20 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது
குறித்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையோ வேறு எந்தவித பாதிப்புமோ இல்லையென தெரிவித்துள்ளது.
#World
Leave a comment