கலிபோர்னியாவில் காட்டுத்தீ!

tee

அமெரிக்கா – கலிபோர்னியாவில் வென்ச்சுரா கவுன்ட்டி மலையோர பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த வாரம் ஆரம்பித்த இக் காட்டுத்தீ பல வீடுகளை சாம்பலாக்கிவிட்டு தனது பரப்பினை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

11 சதுர மைல்கள் பரவியிருந்த காட்டுத்தீயானது 24 மணி நேரத்தில் 133 சதுர மைல்களுக்கும் மேல் பரவியுள்ளது என்று சீக்வோயா தேசிய வன அறிக்கை தெரிவிக்கிறது.

சுமார் 2,000 குடியிருப்புகள் மற்றும் 100 வணிக வளாகங்கள் காட்டுத்தீயினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு வணிக கட்டிடங்கள் முழுவதுமாக தீயில் சேதமடைந்துள்ளன.

குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கையில் “கடந்த 30 ஆண்டுகளில் காலநிலை மாற்றம் மேற்கத்திய நாடுகளை மிகவும் வெப்பமாகவும் வறண்டதாகவும் ஆக்கியுள்ளது. இந்த வானிலை மாற்றத்தால் இவ்வாறான காட்டுத்தீயானது அடிக்கடி நிகழும்” என்று கூறியுள்ளனர்.

Exit mobile version