2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகமான வரி செலுத்தும் மனிதராக ஸ்பேஸெக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் மாறுவார் என தவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரரான எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 27,840 கோடி டொலராகும்.
எலான் மஸ்க் நடத்தும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் கோடி டொலர்களாகும்.
இந்த ஆண்டு மட்டும் எலான் மக்ஸ் ஏறக்குறைய 1200 கோடி டொலர் வரை வரி செலுத்தலாம் எனத் தெரிகிறது. முதல்கட்ட கணிப்பில் இந்த ஆண்டுக்குள் 1,100 கோடி டொலர் (ரூ.83,469 கோடி) வரியாகச் செலுத்துவார் எனத் தெரியவந்துள்ளது. இது உத்தேச மதிப்புதான் என்றாலும், வரி செலுத்தும் மதிப்பு 1200 கோடி டொலரை எட்டும் எனக் கணிக்கப்படுகிறது.
#WorldNews