09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

Share

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பக் கோளாறால் குறிப்பாக ஐபோன் (iPhone) பயனர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையச் சேவைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ‘டவுண்டெக்டர்’ (Downdetector) இணையத்தளத்திற்கு, வட்ஸ்அப் வெப் செயலிழந்துள்ளதாக ஆயிரக்கணக்கான பயனர்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர். கணினியுடன் தொலைபேசியை இணைப்பதில் (Pairing) சிக்கல், செய்திகள் தாமதமாகச் சென்றடைதல் அல்லது கணினியில் வட்ஸ்அப் திறக்கப்படாமை போன்ற பிரச்சினைகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், இந்தச் சிக்கலானது பெரும்பாலான எண்ட்ரொய்டு (Android) பயனர்களைப் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எண்ட்ரொய்டு தொலைபேசிகளைப் பயன்படுத்தி வட்ஸ்அப் வெப் சேவையைப் பயன்படுத்துபவர்களுக்குச் சேவை வழக்கம் போல் இயங்குவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து வட்ஸ்அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) இன்னும் அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை.

 

 

Share
தொடர்புடையது
11 3
செய்திகள்இந்தியா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு: நடிகர் விஜய்யின் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள...

10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...

06 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரே நாளில் 549 பேர் கைது: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் போக்குவரத்து விதிமீறல்களும் அடக்கம்!

இலங்கை பொலிஸாரினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது,...