உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர், உலகளவில் வாராந்த கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தாக்கம் செலுத்திவரும் கொரோனாப் பெருந்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்தில் மீண்டும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.