வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை: சிறையில் அடைக்கப்பட்ட ‘மிதிகம ருவான்’ மீது பொலிசார் விசாரணை!

25 68fc8ee613459

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அறையில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பூஸ்ஸா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிதிகம ருவான் (அல்லது ருவன் ஜெயசேகர) மீது பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

லசந்த விக்ரமசேகர கொல்லப்படுவதற்கு முன்னர், மிதிகம ருவான் என்பவரால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகப் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

பொலிஸார் சந்தேகிக்கையில், விக்ரமசேகர வழங்கிய தகவலின் அடிப்படையில் மிதிகம ருவானின் இரண்டு உதவியாளர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டமைக்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம்.

கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகர, ஆகஸ்ட் 29, 2025 தேதியிட்ட கடிதத்தில் “சமூக ஊடகங்கள் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மிதிகம ருவான் அல்லது ருவன் ஜெயசேகர என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்ட பதிவு குறித்துத் தனக்குத் தெரியும். பல்வேறு நபர்களின் பெயர்களை வெளியிட்டு, ‘நான் அவர்களின் நெருங்கிய நண்பர்’ என்று கூறி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டன. நான் நீதிமன்றத்தில் முன்னிலையாகும்போது அல்லது பிரதேச சபையை விட்டு வெளியேறும் போதும் என்னை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதனை நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version