கடந்த காலங்களைப் போல நாம் செயற்படமாட்டோம்-முல்லாஹசன் அகுண்ட்

taliban 2

taliban

கடந்த காலங்களைப் போல நாம் செயற்படமாட்டோமென ஆப்கானின் தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் இனி எந் நாட்டின் விவகாரங்களிலும் தலையிட மாட்டோமெனவும் அது தங்களுடைய கொள்கை இல்லை எனவும் அந்நாட்டு தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட் ஊடகமென்றிக்கு தெரிவித்துள்ளார்

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியதை தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

அதை தொடர்ந்து கடந்த காலங்கள் போல் நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் பெண்களின் தேவையான அனைத்து உரிமைகளும் தங்களால் வழங்கப்படும் என்றும் தலிபான்கள் உறுதியளித்தார்கள்.

ஆனால் ஆப்கானில் பழிவாங்கல்களும்,குண்டுவெடிப்புக்களும்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நடைபெற்று வருகிறது.

இச் செயற்படுக்களுக்கு சர்வதேச நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந் நிலையில், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புவதாகவும் கடந்த காலங்களைப் போல நாம் செயற்படமாட்டோமெனவும்
மீண்டும்  ஆப்கானிஸ்தான் தற்காலிக பிரதமர் முல்லா ஹசன் அகுண்ட் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆப்கானுக்கு சீனாவும் பாகிஸ்தானும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

#world

Exit mobile version