26 6969755eb0ba8
செய்திகள்அரசியல்இலங்கை

யாழ். மக்கள் வைத்த நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டோம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதி!

Share

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது யாழ்ப்பாண மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாத்து, இனவாதமற்ற மற்றும் தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்ததாவது “கடந்த பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தை முதன்முறையாக வெற்றி கொள்ள எம்மீது நம்பிக்கை வைத்துப் பங்களித்தவர்கள் நீங்கள். அந்த நம்பிக்கையைச் சிறிதளவேனும் வீழ்ச்சியடைய இடமளிக்க மாட்டேன்.”

இனவாதத்திற்கு இடமில்லாத, அனைவரும் சமத்துவமாக வாழக்கூடிய தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதே எமது இலக்காகும்.

பொருளாதார ரீதியாக அழுத்தங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு, இப்போது இருப்பதை விடச் சிறந்த வாழ்க்கை நிலையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, அனைவரும் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழும் நாட்டை நாம் நிச்சயம் உருவாக்குவோம்.

“இந்தத் தைப்பொங்கல் தினத்தில் நாம் ஒரு பிரார்த்தனை செய்வோம். நாம் அனைவரும் பிரியாது ஒன்றுபடுவோம். எமது மக்களுக்காகச் சிறந்த நாட்டை உருவாக்க அனைவரும் திடஉறுதியுடன் முன்வர வேண்டும்” என ஜனாதிபதி தனது உரையில் அறைகூவல் விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் ஒரு தென்இலங்கை அரசியல் கட்சி வரலாற்றில் முதன்முறையாகப் பாரிய ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த விஜயமும் உரையும் தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....