சவுதி இளவரசி 3 ஆண்டுகள் சிறையில் இருந்தாரா?

Untitled design 1641652764757 1641652773370

சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்ட நிலையில் கடந்த 2019 மார்ச் மாதம் இளவரசி பாஸ்மா சவுத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த ஆண்டு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தனர்.

இதனையடுத்து கடந்த 3 ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதி அரேபிய இளவரசி பாஸ்மா மற்றும் அவரது மகள் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் தடுப்புக் காவலில் இருந்தபோது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என அங்குள்ள மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

#World

 

 

Exit mobile version