23 64fc589ee3eb6
இந்தியாசெய்திகள்

பயிற்சியின் போது நாய்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய விராட் கோலி

Share

பயிற்சியின் போது நாய்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய விராட் கோலி

பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் மைதானத்தில் வந்த நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது.இன்றைய போட்டியில் இலங்கை – வங்கதேச அணிகள் மோதுகின்றன.

ஆனால், கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் முழுக்க நாளை நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தின் மீதே குவிந்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொழும்புவில் இந்திய அணி வீரர்கள் பில்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.அப்போது மைதானத்தில் ஒரு நாய்க்குட்டி இந்திய வீரர்களை சுற்றிக் கொண்டு நின்றது.

அப்போது அந்த நாய்க்குட்டியை பார்த்த விராட் கோலி அதனை செல்லமாக அழைக்க அது அழகாக வாழை ஆட்டிக்கொண்டு விராட் கோலி இடம் சென்றது.

இதை அடுத்து அந்த நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சினார். இதனையடுத்து மற்ற வீரர்கள் நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாட தொடங்கினர். பின்னர் அந்த நாய்க்குட்டி அங்கிருந்து சென்றது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...