sanjay
இந்தியாசெய்திகள்

விஜய் மகன் ஆசைக்கு  நோ சொன்ன லைக்கா

Share

விஜய் மகன் ஆசைக்கு  நோ சொன்ன லைக்கா

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது.

ஆனால் இப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார், மற்ற நடிகர் நடிகைகளின் விவரம் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இந்நிலையில், இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தன்னுடைய முதல் படம் என்பதால் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீனை இசையமைக்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளார் சஞ்சய். ஆனால், இதற்கு லைக்கா நிறுவனம் நோ என கூறிவிட்டதாம்.

அவருக்கு பதிலாக அனிருத் இப்படத்திற்கு இசையமைத்தால், படத்திற்கு நல்ல பிரபலம் கிடைக்கும், படத்தின் பிஸினஸ்க்கும் உதவும் என எண்ணி சஞ்சய்யின் முதல் படத்திற்கு அனிருத்தை இசையமைக்க வைக்க லைக்கா முடிவு செய்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால், இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...