11 8
இந்தியாசெய்திகள்

விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சவால் – திக்குமுக்காடும் தமிழக அரசு

Share

கரூரில் (Karur) இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (06) இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கரூரில் இடம்பெற்ற சம்பவத்தில் எனக்கு தமிழக அரசின் மீது முன்வைக்ககூடிய முக்கிய ஐந்து குற்றச்சாட்டுக்கள் உள்ளது.

நான் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்தித்தேன், அதுமட்டுமல்லாது அவர்கள் எனக்கு அங்கு தெரிவித்ததை நான் இங்கு முன்வைக்கின்றேன்.

முதலாவது, கூட்டம் நடத்துவதற்கு மிகவும் குகலான இடத்திற்கு அனுமதி கொடுத்தது யார் ? இரண்டாவது கூட்டத்திரல் நோயாளர் காவு வண்டியை (ஆம்புலன்ஸ்) அனுமதித்தது யார் ?

இதற்கு தமிழக அரசு கட்டாயம் பதில் தர வேண்டும், காரணம் இந்த நோயாளர் காவு வண்டி கூட்டத்தில் நுழைந்ததால் மாத்திரம்தான் அங்கு மக்களுக்கு இடையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது, கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (Vijay) மீது செருப்பு மற்றும் கற்களை வீசியவர்கள் யார் ? இன்று சிசிரிவி காணொளிகள் எல்லா இடத்திலும் வலம் வரும் நிலையில், அதனை வீசியது யார் என்பது முதற்கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவரை இதுவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? விஜய் கைது செய்யப்படுவாரா? புஸ்சி ஆனந்த் கைது செய்யப்படுவாரா? நிர்மல் குமார் கைதாவாரா என்று மட்டும் ஊடகங்களில் கேள்விகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் ஏன் செருப்பு வீச்சு நடத்தியவரை கைது செய்ய கோரவில்லை?

இது தொடர்பில் மட்டும் ஊடகங்கள் ஏன் வாய்திறக்கவில்லை? கட்சியின் உண்மையான தொண்டர்கள் தலைவர் மீது செருப்பு வீச்சு நடத்துவார்களா?

அப்படியாயின் அங்கு தாக்குதல் நடத்தியது உள்ளூர் ரவுடிகளே, அதுவும் அந்த ரவுடிகளை இயக்குகின்ற பத்து ரூபாய் மந்திரி ஒருவரே இவ்வாறு திட்டமிட்டு இதனை நடத்தியுள்ளார்.

நான்காவது இத்தனை கூட்டம் நடைபெற்ற போது நடக்காத ஒரு சம்பவம் கரூரில் மட்டும் ஏன் இடம்பெற வேண்டும் ? ஐந்தாவது கூட்ட நெரிசலை கட்டுபடுத்த காவல்துறை ஏன் பணியமர்த்தப்படவில்லை ? கூட்டத்தை கட்டுபடுத்த அந்த இடத்தில் காவல்துறை இல்லை என்பதே உண்மை.

அந்த இடத்தில் காவல்துறை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது ஆனால் பார்த்த காணொளிகளில் ஒரு இடத்தில் கூட காவல்துறையினர் நிறுத்தப்படவில்லை.

இன்றைய ஆட்சியாளர்கள் கரூர் செல்வதாக இருந்தால் பாதையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தப்படுகின்றனர் ஆனால் இலட்சக்கணக்கில் மக்கள் வருவார்கள் என தெரிந்தும் காவல்துறை பணியமர்த்தப்படாதது ஏன்? இதற்கு தமிழக அரசு மக்களுக்கு கட்டாயம் பதில் தர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...