world 73
செய்திகள்இந்தியா

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிய விஜய்: காரைக்குடியில் பேச அனுமதி மறுப்பு!

Share

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காரைக்குடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், காவல்துறை அனுமதித்த நேரத்தைத் தாண்டி வருகை தந்ததால் அவர் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே பேச முடியாமலேயே விஜய் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக விஜய் நேற்று காரைக்குடிக்கு வருகை தந்தார். இதற்காக நண்பகல் 12 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி நோக்கிப் பயணமானார்.

மதுரையிலிருந்து காரைக்குடி வரும் வழியில் சாலையின் இருபுறமும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்ததால், விஜய்யின் வாகனம் மிகவும் மெதுவாகவே நகர்ந்தது. இடையில் எதிர்பாராத விதமாகப் பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கிய விஜய், தயாராக வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் ஏறிப் பயணிக்கத் தொடங்கினார். இந்தச் சைக்கிள் பயணத்தால் பயண நேரம் மேலும் அதிகரித்ததுடன், 90 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலானது.

இறுதியாக மதியம் 2.30 மணிக்கு மேலேயே விஜய் பிரச்சார இடத்திற்கு வந்து சேர்ந்தார். எனினும், காவல்துறை விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்ததால், தேர்தல் நடத்தை விதிகளைச் சுட்டிக்காட்டி அவருக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்களைப் பார்த்துத் தனது வாகனத்திலிருந்து கையசைத்தவாறு, உரையாற்றாமலேயே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...