இறக்குமதி தடையை மீறி இலங்கைக்குள் வாகனங்களா?

new car sales

வாகன இறக்குமதிக்கான தடையை மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு இலங்கை சுங்கத்திணைக்களம் பதிலளித்துள்ளது.

அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு புதிய சொகுசு ரக கார்கள் ஏற்றிச் செல்லப்பட்டமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாகனங்கள் எவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என பலதரப்பட்ட தரப்பினரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள சுங்க பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா, கடுவெல முதலீட்டுச் சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இலங்கை வாகன பழுதுபார்க்கும் தொழிற்சாலையினால் பெறுமதி கூட்டப்பட்டதன் பின்னர் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மேற்படி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பெப்ரவரி 11 அன்று, மேக் மரியா சவேரியா என்ற கப்பலில் குறித்த இரண்டு காடிலாக் எஸ்கலேட் வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கனடாவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய தேவையான ஆவணங்களை நிறுவனம் வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

 

 

Exit mobile version